நோக்கம்

‘‘இலங்கை வாழ் கமக்கார சமூகத்தினரதும் மற்றும் சகல கமத்தொழில் காணிகளினதும் நிலைபேறான அபிவிருத்தி”

செயற்பணி

“இலங்கை வாழ் கமக்கார சமூகங்களின் நிலைபேறான அபிவிருத்தியிலும் மற்றும் சகல கமத்தொழில் காணிகளினதும் செழுமையான அணுகூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் நிறுவன, உதவி, சட்ட மற்றும் முகாமைத்துவச் சேவைகள் போன்றவற்றை வடிவமைத்தல் மற்றும் சமயோசிதமான வகையில் பேணுதல்”

வரலாறு

இலங்கை வாழ் விவசாயிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கில், அதுவரையில் நடைமுறையிருந்த உணவுத் திணைக்களம் இல்லாதொழிக்கப்பட்டு, 1957 ஒக்டோபர் மாதம் 01 ஆந் திகதி கமநல சேவைகள் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டது. 1958 ஆண்டு 01 ஆம் இலக்கமுடைய வயற் காணிச்சட்டத்தினால் செயற்பட்ட இத்திணைக்களம், தற்போது 2000 ஆண்டு 46 ஆம் இலக்கமுடைய கமநல அபிவிருத்திச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்கமைய கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்னும் பெயரில் செயற்படுகின்றது.

1953 இலக்கம் 01 வயற்காணிச் சட்டம் - (செயற்படவில்லை)
1958 இலக்கம் 01 வயற்காணிச் சட்டம் - (சான்றுப்படுத்தப்பட்ட திகதி 1958.02.01)
வயற்காணிச் சட்டத்திற்குரிய திருத்தங்கள் - 1958 இலக்கம் 30
- 1961 இலக்கம் 61
- 1964 இலக்கம் 11
- 1966 இலக்கம் 25
- 1970 இலக்கம் 30 உடைய விசேட ஏற்பாடுகள் சட்டம்
1972 கமத்தொழில் விளைவுப் பெருக்கச் சட்டம் - 1972 செப். 21 இல் சான்றுப்படுத்தப்பட்டது
1973 இலக்கம் 42 கமத்தொழில் காணிச் சட்டம் - 1973 ஒக்.17 இல் சான்றுப்படுத்தப்பட்டது
1979 இலக்கம் 58 கமநல சேவைகள் சட்டம் - 1979 ஒக்.25 இல் சான்றுப்படுத்தப்பட்டது
1991 இலக்கம் 4 கமநல சேவைகள் திருத்தச் சட்டம் - 1991 பெப். 02 இல் சான்றுப்படுத்தப்பட்டது
2000 இலக்கம் 46 கமநல அபிவிருத்திச் சட்டம் - 2000 ஆகஸ்ட் 18 இல் சான்றுப்படுத்தப்பட்டது
2011 இலக்கம் 46 கமநல அபிவிருத்திச் (திருத்தச்) சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000 இலக்கம் 46 கமநல அபிவிருத்திச் சட்டம் - 2011 நவம்பர் 22 இல் சான்றுப்படுத்தப்பட்டது